சோற்றை உருண்டைபிடித்து சுவற்றில்
அடித்தால் அது திரும்பி வருவது இயற்கையான செயல்தான் என இந்திய வேளாண்மை ஆராய்ச்சி
நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய விஞ்ஞானி வி.பி.சிங் விளக்கமளித்தார்.
இந்நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர்,
சோற்றை உருண்டையாக்கி அதை சுவற்றில் பந்துபோல்
எறிய அது சுவற்றில் பட்டு திரும்பி அதே வேகத்துடன் வரும் வீடியோவை இனையதளாத்தில்
பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் அனைவரும் இது பிளாஸ்டிக் அரிசி
என உறுதி செய்து கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய வேளாணமை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றிய
வி.பி சிங் என்பவர், அது பிளாஸ்டிக் அரிசி கிடையாது.
வழக்கமாக நாம் உண்ணும் அரிசைச் சோற்றை உருண்டையாக்கினால் அது சோற்றில் இருக்கும்
ஒட்டும் தன்மையால் ஒட்டி, இறுகி பந்துபோல ஆகும்.
அந்த உருண்டைக்குள் காற்று புகுந்து
விடுவதால் அது சுவற்றில் பட்டு திரும்பி வேகமாக வருகிறது. இது அரிசியின் இயல்பான
குணம் தான் என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவைக் காண்பவர்கள்
யாரும் அச்சமடைய வேண்டாம். அரிசியில் 80 சதவிகிதம்
மாவுச் சத்து இருப்பதால் இது இயல்பான, இயற்கையான குணம்
என்றும் கூறியுள்ளார்.
வி.பி சிங் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி
நிறுவனத்தில்பணியாற்றிய போது பூசா 1, பூசா 6, பூசா 1121 ஆகிய பாசுமதி அரிசி ரகங்களை
கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment