கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பாக,
தேவைப்படும் தகவல்கள் அளிக்க, விடுமுறையின்றி கல்வி அலுவலகங்கள் ஜரூராக செயல்படுகின்றன.
இந்நிலையில், "கல்வித்துறை வரலாற்றில் அரசு பள்ளிகளை பாதுகாக்கும் வகையில்,
41 புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். அவை ஜூன் 15ல் நடக்கும் கல்வி மானிய
கோரிக்கையில் எதிர்பார்க்கலாம்,"
என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், என்னென்ன அறிவிப்பு வெளியிடலாம் என்பது குறித்து கல்வி அதிகாரிகள்,
ஓய்வு பேராசிரியர், கல்வியாளர் என அனைத்து தரப்பு வல்லுனர் குழு ஆலோசனை அடிப்படையில் '41 அறிவிப்புகள்' விவரம் தயாராகி வருகின்றன. இதற்காக,
'மாவட்ட முதன்மை கல்வி, தொடக்க கல்வி அலுவலகங்களில், எந்த
நேரத்திலும்
கல்வி தொடர்பாக தகவல்கள் திரட்ட
வேண்டியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் அலுவலர்கள்
தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமான வேலை நாட்களை தவிர சனி,
ஞாயிறும் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இரவு 10:00
மணி வரை அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
No comments:
Post a Comment