உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக,
பிளஸ் 2 தேர்வு எழுதிய
மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த உயிரியல் தேர்வு குறித்து வால்பாறை பியூலா
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கருத்து: காயத்ரி: உயிரியல் தேர்வை
பொறுத்தவரை, ஆசிரியர்கள் சொல்லித்தந்த
பாடத்திலிருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டதால், விடைகளை விரைவாக எழுதினோம்.ஒன்று, ஐந்து மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஈசியாக
இருந்தது.நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெறுவேன்.கலைவாணி: உயிரியல் தேர்வை பொறுத்த
வரை, படித்த பாடத்திலிருந்து கேள்விகள்
கேட்கப்பட்டதால், தேர்வை எளிதில் எழுதினோம். இது வரை
நடந்ததில், வேதியியல் தவிர மீதமுள்ள அனைத்து
தேர்வுகளும் மிகவும் எளிமையாகவே இருந்தன. சென்டம் வாங்குவது உறுதி.தர்சன்:
பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால்,
வினாத்தாளை பெற்றவுடன் விறுவிறுப்பாக தேர்வை
எழுதினோம். உயிரியல் தேர்வை பொறுத்த வரை ஒன்று மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான
கேள்விகள் சில மட்டும் கஷ்டமாக இருந்தன. இருப்பினும் தெரிந்த கேள்விகளுக்கு விடை
எழுதியுள்ளேன். தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன்.