திரு.T.உதயசந்திரன் கல்வித்துறை செயலர் அவர்களின் மீதுள்ள நம்பிக்கையில்
சொல்கிறேன் இந்த ஊதியக்குழு கண்டிப்பாக இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய பிரச்சணையை
தீர்பதாக அமையும் ( இவர் ஊதியம் பற்றி பேசவே இல்லை ஆனால் இவர் புரிதல் மீதுள்ள
நம்பிக்கை எனக்கு இதை
உணர்த்துகிறது )
"அவர் பேச்சில் தெரித்தவை"
தமிழ் மீதான பற்று!
மதம், சாதிய - வேறுபாடுகள் களையப்பட்டு தமிழ் சமூகம் என்ற உணர்வை கல்வி
அளிக்க வேண்டும் என்ற சிந்தனை!
தந்தை பெரியார் மற்றும் காமராசர்
படங்களை மட்டும் புத்தகத்தில் அச்சிடுவதில்லை கல்வி அவர்களை பற்றி
உணர்வுப்பூர்வமாக கற்பிக்க வேண்டும் என்ற கருத்து!
NEET போன்ற தேர்வுகள் மூலம் நம் மீது
எங்கிருந்து போர் தொடுக்கப்பட்டுள்ளது என்ற வெளிப்படையான பேச்சு!
வரலாறு கடந்த காலத்தை சொல்லுவதுடன்
நிகழ்காலத்தையும் உள்ளூர் வரலாற்றை பற்றியும் புரிந்துக்கொள்ளுவதாகவும் இருக்க
வேண்டும்!!!
தமிழை காக்க
ஆங்கில ஆசிரியர்களின் பணி மிக அவசியம்
என்ற கருத்து!!!
அறிவியல் மற்றும் கணிதம் விதிகளை
அறிமுகம் செய்வதற்கு அதன் தேவைகளுக்கான சூழ்நிலையையும் சேர்த்தே அறிமுகம்
செய்யப்பட வேண்டும் என்ற அலோசனை!!!
என்ன ஒரு புரிதல் நமது
துறையைப்பற்றி!!!
கோட்டையில் அமர்ந்திருந்தாலும்
வகுப்பறையில் உள்ள உண்மை நிலையை விளக்கும் விதம்!!!
உங்கள் விமர்சனங்களை மட்டும்
எதிர்பார்க்கிறேன் என்று தன்னுடைய செல்பேசி எண்ணை தந்து...
அர்பணிப்போடு உழைக்கும்
ஆசிரியர்களுக்கு இந்த துறை தகுந்த இடத்தை அளிக்கும் என்றும் நமது துறை கம்பிரமாக
எழுந்து நிற்க வேண்டும் என்ற உணர்வை விதைத்த பேச்சும் அற்புதம்....
இவர் தொடர்ந்தால் நமது கல்வித்துறையில்
கல்விப்புரட்சி
கண்டிப்பாக இந்த இணைப்பை அழுத்தி அவர்
பேச்சை கேளுங்கள்...
https://youtu.be/RBZ7eKTdcu4
https://youtu.be/Q52fd4cSH
https://youtu.be/p923q0G7dLI
https://youtu.be/P2eR9QDJtm4
No comments:
Post a Comment