மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு
பள்ளி மாணவர்களின் சீருடை:
அமைச்சர் தகவல்அரசு பள்ளி மாணவர்களின்
சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் இன்று
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - அரசுப் பள்ளி மாணவர்களின்
சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் அளவு புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.
இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள்
மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட
போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment