கம்ப்யூட்டர் அப்படிங்குற விஷயம்
இன்னிக்கு ஓரளவுக்கு எல்லார் வீட்லயும் இருக்குற விஷயமா மாறிடுச்சு.
அதுலயும் இன்னிக்கு இருக்குற யூத்கள்
அதுல மவுஸ்னு ஒரு விஷயத்த ஏன் கண்டுபுடிச்சாங்கனு கேக்குற அளவுக்கு கீ-போர்ட்
ஷார்ட்கட்லயே கெத்து காட்டுறாங்க. வாட்ஸ் அப், யூ-ட்யூப்க்கு எப்படி விதவிதமான ட்ரிக்ஸ் இருக்கோ அதேமாதிரி
கம்ப்யூட்டர்ல கீ-போர்டு மூலமா கெத்து காட்டுற 13 ட்ரிக்ஸ் இதோ...
1.ப்ரின்ட் ஸ்க்ரீன்னு ஒரு கீ இருக்கும்
அத பயன்படுத்தினா மொத்த சிஸ்டம் ஸ்க்ரீனும் காப்பி ஆகும். ஆனாAlt+Print
Screen பயன்படுத்தினா பர்ஃபெக்ட் ஸ்க்ரீன் காப்பி
ஆகும்.
2. Alt+Tab ஒரு விண்டோவிலிருந்து இன்னோரு
விண்டோவுக்கு செல்ல உதவும்
3. Ctrl+Tab ப்ரெளசரின் ஒரு டேப்பிலிருந்து இன்னோரு
டேப்புக்கு செல்ல உதவும்.
4. டாஸ்க் மேனேஜருக்கு Ctrl+Shift+Esc
-ஐ அழுத்தவும்
5. சில பக்கங்களை சேமித்து வைக்க Ctrl+D-ஐ அழுத்தினால் புக் மார்க் ஆகிவிடும்
6. நீங்கள் எழுதிய டாக்குமெண்ட்டில் உள்ள
வார்த்தை பிழைகளை அறிய F7 ஐ அழுத்தினால் போதும்.
7. யூ-ட்யூப் வீடியோ ப்ளே ஆகும் போது 'J'
மற்றும் 'L' கீ மூலம் ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்ய முடியும். 'K' மூலம் வீடியோவை பாதியில் நிறுத்த முடியும்.
8. Windows Key+Enter அழுத்தினால் கணினியை பின் தொடர
வைக்கும் வாய்ஸ் நரேட்டர் ஓப்பன் ஆகும்.
9.இணையதளங்களின் பெயரை மட்டும் டைப்
செய்து Ctrl+Enter ப்ரஸ் செய்தால் 'www.' &
'.com' தானாகவே சேர்ந்துவிடும்.
10. ஒரு ஃபைலில் செலக்ட் செய்யப்பட்ட
வார்த்தையை ஹப்பர்லின்க் ஆக்க Ctrl+K ப்ரஸ் செய்தால்
போதும்.
11. Shift+F3 மூலம் எழுத்துக்களை கேப்பிட்டல்
மற்றும் ஸ்மால் எழுத்துக்களுக்கு மாற்ற முடியும்.
12. Windows Key+L கீயை அழுத்தினால் நீங்கள் உங்கள்
கணினியை லாக் செய்து வைக்க முடியும்.
13. Windows key-ஐ அழுத்தி U வை இரண்டு முறை அழுத்தினால் உங்கள் கணினி ஆஃப் ஆகும்.
என்ன பாஸ் இதுக்கெல்லாம் மவுஸ் வேணுமா?
அப்பறம் என்ன இனிமே நீங்களும் கெத்து காட்டுங்க...
No comments:
Post a Comment