அரசு பள்ளி மாணவர்கள் 'லேப்டாப்'
பெற்றவுடன் பள்ளிக்கு முழுக்கு போட்டதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
குறைந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக சிறப்பு வகுப்பு நடத்துவது,
கையேடு
வழங்குவது என, கல்வித்துறை பல
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் தனியார் பள்ளிகளை விட,
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது.
அரசு பள்ளிகளில் கிராமப்புற ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.
அவர்கள் சொந்த வேலைகளை செய்து
விட்டு பள்ளி வருகின்றனர். மேலும்
சிலர் 'லேப் டாப்' வாங்கியவுடன்
தேர்வு எழுதாமலேயே சென்று விடுவதும், கல்வித்துறை
ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிவகங்கை
மாவட்டத்தில் மட்டும் 'லேப் டாப்' வாங்கிய
200 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.