நிராகரிக்கப்பட்ட காப்பீட்டுத்
தொகையினை திரு.அருண் அவர்கள் (இ.ஆசிரியர், நத்தம் ஒன்றியம்,cell-
7448352052) discharge ஆகாமல் இரண்டு நாள் போராட்டங்களுக்குப்
பிறகு பெற்றுள்ளார்.
மூன்று கட்டமாக அவர் காப்பீட்டுத் தொகையினைப்
பெற்றுள்ளார்.
முதலில் ரூ. 15,000
பிறகு ரூ. 30,000
இறுதியாக ரூ.30,000
ஒரு ரூபாய் கூட காப்பீட்டுத் தொகை
கிடையாது என்று கூறிய இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் மருத்துவமனையிடம் ரூ.75,000 காப்பீட்டுத் தொகையினை திரு.ஏங்கெல்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி
திரு.அருண் அவர்கள் பெற்றுள்ளார்.
CPS போராளி தோழர் திரு.பிரெட்ரிக்
ஏங்கெல்ஸ் (cell- 9629927400) அவர்களுக்கு ஆசிரியர் சொந்தங்களின்
சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட
மருத்துவமனையில், குறிப்பிட்ட சிகிச்சைக்கு கட்டணமில்லா
சிகிச்சை வழங்கப்படுகிறது. (GO-243)
ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனி ஏதேனும் ஒரு
காரணத்தைக் கூறி காப்பீட்டு உரிமையை நிராகரிக்கவோ அல்லது மிகக் குறைவான
காப்பீட்டுத் தொகையினை மட்டுமே வழங்கி வருகிறது..
100% மருத்துவ காப்பீட்டு உரிமையினை பெற்ற
அரசு ஊழியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்..
அதுவும் பல கட்ட போராட்டங்கள் மற்றும்
மன உளைச்சலுக்குப் பிறகு தான் பெற்றிருக்க இயலும்..
அரசு ஊழியரின் காப்பீட்டு உரிமைக்கு
உட்பட்ட சிக்கிச்சையை, பட்டியலில் உள்ள மருத்துவமனையில் 100% கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டு உரிமை உண்டு.
Discharge ஆகாமல் மருத்துவமனையில் இருந்தபடி
போராடினால் முழு காப்பீட்டுத் தொகையினை பெற இயலும்..
தற்பொழுது வேறு வழியில்லை போராடித்
தான் முழு மருத்துவ காப்பீட்டு தொகையினைப் பெற இயலும்..