May 12, 2016

எந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில், தபால் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தபால்
வாக்குகளை பெறும் நேரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது. படிவம் 13சி உறை முதலில் பிரிக்கப்பட்டு, அதனுள் 13ஏ படிவம் இருக்க வேண்டும்.


இல்லையென்றால் நிராகரிக்கப்படும். படிவம் 13 ஏவில் வாக்காளரின் கையெழுத்து மற்றும் கெசட் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். சரியாக உள்ள படிவம் 13ஏ மட்டும் தனி உறையில் வைக்கப்படும். சம்மந்தப்பட்ட உறையில்தான் வாக்குச்சீட்டு இருக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சீட்டுகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.