கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ்,
அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு
முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கடந்த, 2015 நவ., டிச., மாதங்களில் நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்
முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் நேற்று மாலை,
5:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள்,
www.b-u.ac.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண்களை பதிவு
செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மேலும், மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கு, விண்ணப்பிக்க, பிப்., முதல் தேதி, இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாடி ரீமா ரோஸ்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment