நண்பர்களுக்கு
வணக்கம்,
ஆசிரியர் ஆவது நமது குறிக்கோள் லட்சியம்
கனவு அதை அடைய நாம் பல போராட்டங்கள் கஷ்டங்கள் என பல்வேறு இடர்பாடுகளை
சந்தித்துகொண்டே தான் இருக்கோம். பல குழப்பங்கள் நிலவுகிறது
தற்போது ஆசிரியர் நியமனங்களில் இரண்டாவது
பட்டியல் வெளியாக இருந்த சூழ்நிலையில் அரசு பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதால்
மேலும் பல பிரச்சனைகளையும் நீதிமன்ற கண்டனங்களுக்கும் உட்பட்டு வருவதால் தற்போது
இரண்டாவது பட்டியல் வர வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சிலர் உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்புக்கு பிறகு வரலாம் என நம்பிக்கையோடு உள்ளனர்.
புதிய TET
வருமா??
பிப்ரவரியில்
அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் ஏப்ரலில் புதிய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற
வாய்ப்பு உள்ளது. எனவே பல பிரச்சனைக்கு இனி
இடம் கொடுக்காமல்
புதிய தகுதி தேர்வு வைக்க அரசு ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் தெரியவருகிறது.
இரண்டாவது
பட்டியல் வருமா?
இரண்டாவது
பட்டியல் ஆசிரியர் நியமனங்களில் வரும் அதுவும் தற்போது வெற்றி பெற்றவர்களை கொண்டே
நியமிக்கப்படும் என முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் பெறப்பட்ட பதிலில்
தெரியவந்தது. இதனை அனைத்து முக்கிய கல்வி வலைதளங்கள் மற்றும் பேஸ்புக்கில் முக்கிய
ஆசிரியர் பக்கங்கள் கூட உறுதியாக கூறினர். காரணம் ஆதரம் முதலமைச்சர் தனிப்பிரிவு
பதில் என்பதால் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பல நீதிமன்ற கண்டனங்களுக்கு
ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்வித்துறை உட்படுவதால் நீதிமன்ற தீர்ப்புக்கு
அடுத்து புதிய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தலாம் என ஒரு தரப்பு கூறிவருகின்றனர்.
ஒரு தரப்பு பிரிவினர் கண்டிப்பாக இரண்டாவது பட்டியல் வரும் என உறுதியாக
நம்புகின்றனர்.
நீங்கள் என்ன
முடிவு எடுக்க வேண்டும்
இரண்டாவது பட்டியல் வந்தால் நல்லது அதற்காக
நேரத்தை வீணாக்காதீர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இப்போதே படிக்க ஆரம்பியுங்கள்
ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் ஏப்ரலில் வந்தாலும் சரி இந்த வருடத்தின் இறுதியில்
வந்தாலும் சரி எப்போது வந்தாலும் சரி எதற்கும் தயாராக இருங்கள் இரண்டாவது பட்டியல்
பற்றி நீங்கள் நினைப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை. நடப்பது தானக நடக்கும்
நமது பங்கு எதுவும் இல்லை ஆனால் புதிய ஆசிரியர் தகுதி தேர்வை மனதில் கொண்டு
படியுங்கள் இரண்டாவது பட்டியல் வந்தால் வேலைக்கு செல்லுங்கள் இல்லை என்றால்
ஆசிரியர் தகுதி தேர்வு வந்தால் தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் தற்போது தேர்தல் மிக
அருகில் வருவதால் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் வரலாம் எனவே அடுத்த தேர்வில்
நீங்கள் ஆசிரியர் ஆகும் கனவு மெய்ப்படும் எனவே தற்போதே தயாராகுங்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete