கல்விக்காக அதிகமாக செலவிடும்
தென்னிந்திய குடும்பங்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும்
வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான
தொகை குழந்தைகளின் கல்விக்கான செலவிட்டு வருவது
குறித்து செய்த ஆய்வில்,
தென் இந்தியாவில் தான் அதிகமாக
கல்விக்காக செலவிடுகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை
இனி காணலாம்.
தென் இந்தியா, குடும்பங்களின் மொத்த வீட்டுச் செலவில் 40% உயர்கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது
கிராமங்களிலுள்ள குடும்பங்களின்
செலவில் சராசரியாக 43% உயர்கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.36ஆயிரத்து 063 ரூபாய்கள்.
நகரங்களிலுள்ள குடும்பங்களின் செலவில்
சராசரியாக 38% உயர்கல்விக்காக ஒதுக்கப்படுகிறது,
ஆண்டுக்கு ரூ.49ஆயிரத்து 690 ரூபாய்கள்.
இந்திய அளவில் கிராமங்களிலுள்ள
குடும்பங்களின் செலவில் சராசரியாக 45.3% மட்டுமே
உயர்கல்விக்காகச் செலவிடப்படுகிறது
நகரங்களிலுள்ள குடும்பங்களின் செலவில்
சராசரியாக 18.4 % உயர்கல்விக்காகச் செலவிடப்படுகிறது
நாட்டிலேயே வடகிழக்கு மாநிலங்கள் தான்
உயர்கல்விக்காக மிகவும் குறைவாக செலவிடுகின்றன.
கிராமங்களில் வசிப்பவர்களின் சராசரி
வருமானம் தங்களது குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது!
No comments:
Post a Comment