சி.பி.எஸ்.இ., தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த
மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்கான, துணை தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று
துவங்கியது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து, 10ம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்காக,
ஜூலையில், துணை தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று
துவங்கியது. வரும், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதன்பின், தாமத கட்டணத்தில், ஜூலை, 3 வரை விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துஉள்ளது.இதற்காக மண்டல
அலுவலகங்களில், உதவி அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment