ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு
இன்று மாத்திரை அதிகமாகி விட்டது... உண்மை!
உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப்
பார்த்து
காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச்
சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில்
பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்;
அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக்
கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர்
எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.
ஆன்டிபயாடிக் மாத்திரைகள் - பால்
பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும்
பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline),
சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து
செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
வலி நிவாரணி மருந்துகள் -
குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும்
இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க
வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால்,
மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப்
பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால்,
சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
அதே போல வலிநிவாரணிகளுடன் (NSAID-
Nonsteroidal Anti-inflammatory Drugs) ரத்த அழுத்திற்காக சாப்பிடக்கூடிய
மாத்திரைகளை (HTN drugs- Blood Pressure) உட்கொண்டாலும்
அதன் செயல் திறனை குறைத்துவிடும்.
நுரையீரல் பாதிப்பு தொடர்பான
மருந்துகள் - காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற
மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது.
இவற்றில் உள்ள 'காஃபின்' நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறு மருந்துகள் - வாழை,
கீரை, தக்காளி,
சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும்
கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற
மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில்
பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து
பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
இதயநோய் தொடர்பான மருந்துகள் -
மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide
dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக
கொடுக்கப்படுபவை. 'ஆன்டி ஆர்த்திமிக் மருந்து' என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால்,
குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த
நிலை ஆபத்தான சூழ்நிலைகளை
உருவாக்கலாம். இந்த மாத்திரைகள்
மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க
வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு
முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும் மருந்து -
திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும்
ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin)
லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை
உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு ஹார்மோன் சுரக்கும்
மருந்துகள் - சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும்
லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும்
நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை
உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
மனஅழுத்த மருந்துகள் - பாலாடைக்கட்டி,
மீன், இறைச்சி,
கொத்தமல்லி
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’
(Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine),
பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி,
பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.
ரத்தம் தொடர்பான நோய்கள் - பூண்டு,
இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான
நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை
உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக்
கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை,
முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை
உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை...
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன்
மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை
பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு
சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment