Apr 14, 2017

மின் வாரிய உதவியாளர் மதிப்பெண் வெளியீடு| kalviseithi news

    உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண்ணையும், மின் வாரியம்
வெளியிட்டது.
 தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், இளநிலைஉதவியாளர், 'டைப்பிஸ்ட்' என, 2,175 பணியிடங்களை நிரப்ப, 2016ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்ற, அனைவரும் பெற்ற மதிப்பெண் முழு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10 பதவிகளில், 2,175 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது. அதன்படி, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயித்து, விரைவில் வெளியிடப்படும்; அதை தொடர்ந்து, நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment