இன்று நாம் பயன்படுத்தும்
ஸ்மார்ட்போனின் மதிப்பு விலை அளவில் குறைவாக இருந்தாலும் அவற்றில் நாம் சேமித்து
வைத்துள்ள தரவுகளின்
மதிப்பை கணக்கிடவே முடியாது.
இத்தகைய விலை மதிப்புடைய ஸ்மார்ட்போன்
மற்றும் அதில் இருக்கும் தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது
சாத்தியமான ஒன்று தான்.
இன்று வெளியாகும் ஸ்மார்ட்போன்களில்
பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் என்க்ரிப்ஷன் வசதியை வழங்குகின்றன. இவை
ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்குகின்றன. என்க்ரிப்ஷன் என்பது நாம்
வைத்துள்ள தரவுகள் அனைத்தும் குறியீடுகளாக மாற்றப்பட்டு விடும். பின் இவற்றை
பிரத்தியேக கடவுச்சொல் இன்றி யாரேனும் இயக்கவோ பார்க்கவோ முடியாது. பிரத்யேக
கடவுச்சொல் பின் அல்லது பேட்டர்ன் லாக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இத்தகைய பாதுகாப்பான என்க்ரிப்ஷன்
வசதியினை உங்களது ஸ்மார்ட்போனில் வழங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு
பார்ப்போம்..
குறிப்பு: ஸ்மார்ட்போனினை என்க்ரிப்ஷன்
செய்யும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும். என்க்ரிப்ஷன் செய்யப்படும் போது
ஸ்மார்ட்போன்களை எக்காரணம் கொண்டும் ரூட் செய்ய வேண்டாம். ஒருவேளை ரூட்
செய்யப்பட்டிருந்தால் என்க்ரிப்ஷன் செய்யப்படும் முன் ஸ்மார்ட்போனை அன்ரூட் செய்ய
வேண்டும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை:
* ஸ்மார்ட்போனின் பேட்டரி 80%க்கும் அதிகமாக இருக்க வேண்டும்
* ஸ்மார்ட்போன் எப்போதும் சார்ஜரில்
பிளக் செய்யப்பட்டிருக்க வேண்டும்
* பாதுகாப்பு நடவடிக்கையாக உங்களது
தரவுகளை பேக்கப் செய்து கொள்ளுங்கள்
என்க்ரிப்ஷன் செய்யும் முறைகள்:
* முதலில் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் --
செக்யூரிட்டி ஆப்ஷன் செல்ல வேண்டும்
* அடுத்து என்க்ரிப்ட் போன் என்ற ஆப்ஷனை
கிளிக் செய்ய வேண்டும்.
* என்க்ரிப்ட் போன் ஆப்ஷனை கிளிக் செய்த
பின், ஆப்ஷனை உறுதி செய்ய கோரும். இங்கு உறுதி செய்ய
கோரும் பட்டன்களை கிளிக் செய்ய வேண்டும்.
* அடுத்து உங்களின் ஸ்மார்ட்போன்
அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகும்.
* என்க்ரிப்ஷன் முடிந்த பின்
ஸ்மார்ட்போன் மீண்டும் ரீஸ்டார்ட் ஆகும்.
* இனி உங்களது ஸ்மார்ட்போன் என்க்ரிப்ட்
செய்யப்பட்டு விடும்.
No comments:
Post a Comment