அளிக்கும் ஆய்வு!!
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரும்
மார்ச் 31 ஆம் தேதி வரை
அனைத்து சேவைகளும்
இலவசமாக வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்தது.
வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜியோ தனது
வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்தது. இதனால் ஜியோவை
பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், 'பெர்ன்ஸ்டெயின்' என்ற ஆய்வு நிறுவனம் தொலைத்தொடர்பு
நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் ஜியோ முதலிடத்தில்
உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 1,000 வாடிக்கையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 67 சதவிகிதத்தினர் ஜியோ சேவையை இரண்டாம் தேர்வாக பயன்படுத்தி
வருவதாகவும், இதில் 63 சதவிகிதத்தினர் ஜியோ சேவையை முதன்மை தேர்வாக மாற்ற
திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
28 சதவிகிதத்தினர் தொடர்ந்து ஜியோ சேவையை
இரண்டாம் தேர்வாகவே பயன்படுத்தப் போவதாகவும் மீதமுள்ள 2 சதவிகிதத்தினர் ஜியோ சேவையைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment