இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும்,
என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள்
எளிமையாக
இருந்ததால் சென்டம் மதிப்பெண் எடுக்கலாம், என மாணவர்கள்
கூறினர்.
ஜி.முகேஷ்கண்ணன், அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தரகோசமங்கை:
புளூ பிரின்ட் படியும், புத்தகம் படியும், வினாக்கள் இருந்ததால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண்
வினாக்கள் குழப்பமாக இருந்தபோதிலும் விடையளிக்க முடிந்தது. 3 மதிப்பெண் வினாக்களுக்கு யோசித்து பதில் எழுதுவது போல் இருந்தது. 5 மதிப்பெண் வினா கடந்த காலங்களை விட எளிமையாக இருந்தன. 10 மதிப்பெண் வினா மிக எளிமையாக இருந்தது. விரைவாக பதில் எழுதும்
மாணவர்கள் 45 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வை
முடித்திருக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சென்டம் உறுதி.வி.அனுஜா,
நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: நான்கு பகுதிகளிலும் 3, 5, 10 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புத்தகத்தை முழுமையாக
படித்திருந்தால் சராசரி மாணவர்கள் கூட 130
மதிப்பெண்எடுக்கலாம். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் இந்த முறை
கேட்கப்பட்டிருந்தன.
மாதிரி வினாத்தாள் அடிப்படையில்
படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடிந்தது. நன்றாக படிக்கும்
மாணவர்கள் நிச்சயமாக சென்டம் எடுக்க முடியும். போதிய நேரம் இருந்ததால் எழுதிய
பதிலை சரி பார்க்க முடிந்தது.
இ.செல்வேந்திரன், ஆசிரியர், எலைட் பள்ளி, ராமநாதபுரம்: கற்கும் திறன் குறைந்த மாணவர்களும் எளிதில் பதில்
அளிக்கும் வகையில் வினாக்கள் எளிமை. ஆசிரியரின் வழிகாட்டுதல் படி, புத்தகம் முழுவதையும் படித்து தேர்வெழுதியமாணவர்களுக்கு சென்டம்
உறுதி. மெல்ல கற்கும் மாணவர்கள் 120 மதிப்பெண்
எடுக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டு சென்டம் எண்ணிக்கை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment