போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுத் துறைகளில் வேலைப் பெற்றுள்ளனர் என்று மத்திய இணை
அமைச்சர் ஜிதேந்திர சிங்
மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதில் 276 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் 521 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1,035 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
போலிச் சாதிச் சான்றிதழ் மூலமாக
நிதித்துறை சேவைகள் துறையின் கீழ் 1,296 பேர் வேலைப்
பெற்றுள்ளனர். வங்கிகளைப் பொறுத்தவரை 157 பாரத ஸ்டேட்
வங்கியிலும், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 135 பேரும், இந்திய ஓவர்சிஸ் வங்கியில் 112 பேரும், சிண்டிகேட் வங்கியில் 103 பேரும் வேலைப் பெற்றுள்ளனர்.
காப்பீடு நிறுவனங்களான நியூ இந்தியா
அஷ்யூரன்ஸ்சிலும், யுனைடெட் இந்தியா அஷ்யூரென்ஸ்சிலும்
முறையே 41 பேர் வேலைப் பெற்றுள்ளனர் என்று
அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment