Oct 25, 2015

tnpsc group 2a exam | குருப் 2A விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா?

தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.
      
         


இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, தேர்வு தேதியை ஜனவரி, 24க்கு தள்ளிவைத்தார். 'கூடுதலாக, மூன்று துறைகளில், 84 காலியிடங்களும் சேர்த்து நிரப்பப்படும்' என, அறிவித்துள்ளார். ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, டி.என்.பி.எஸ்.சி., நீட்டிக்கவில்லை. நவம்பர், 11, இரவு, 11:59க்குள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment