அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்று வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு,
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணையையும் தேர்வு
முடிவுகள் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி
முடிவடையும். இத்தேர்வின் முடிவுகள் மே 16-ந் தேதி
வெளியிடப்படும்.பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ல் நிறைவடையும்.
தேர்வு முடிவுகள் மே 30-ந் தேதி வெளியிடப்படும்.எஸ்எஸ்எல்சி
தேர்வு மார்ச் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிவடையும். இத்தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி அன்று வெளியிடப்படும்.
தேர்வு நேரத்தைப் பொறுத்தவரையில்,
பிளஸ் 2 பொதுத்தேர்வுதினமும்
காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் காலை 10 மணி முதல்
மதியம் 12.45 மணி வரையும் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளுக்கு புதிய வகுப்புகள்தொடங்குவதற்கு முன்பாகவே
பொதுத்தேர்வுகளுக்கான காலஅட்டவணை வெளியிடப்படுவது அரசு தேர்வுத்துறை வரலாற்றில்
இதுவே முதல்முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment