டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு,
ஆசிரியர்களை தேர்வு செய்ததில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஆசிரியர் சங்கம்
சார்பில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரிடம் புகார்
அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ண னின் பிறந்த நாளான,
செப்டம்பர், 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக
கொண்டாடப்படுகிறது.
தேர்வுக்குழு:
இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, டாக்டர்
ராதாகிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கும். சமீபத்தில்,
கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினத்தன்று, 379 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.இந்நிலையில், விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக புகார்கள்
எழுந்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கத்தின்
மாநில தலைவர் ராஜ்குமார், பள்ளிக்கல்வி முதன்மை செயலர்
சபிதாவிடம் மனு அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
ராதாகிருஷ்ணன் விருதுக்கான, ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. கோவை, நீலகிரி மாவட்டங்களில், இந்தக் குழுவில்
இடம் பெற்ற, இரண்டு ஆசிரியர்களே விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். அதனால், மற்ற தகுதியான ஆசிரியர்களின் பெயர்கள்
நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, தகுதி யானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, மனு
அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.இதேபோல, வேறு சில மாவட்டங்களிலும் விருதுக்கான
ஆசிரியர் கள் தேர்வில், பல குளறுபடிகள் நடந்துஉள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. விசாரணைசென்னையில், சில அரசு
மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெயர், பரிந்துரை பட்டியலில் இல்லாமலேயே, விருதுக்கு தேர்வாகியுள்ளதாகவும், இதற்கு சில அதிகாரிகள் உடந்தை என்றும் ஆசிரியர் சங்கங்கள் புகார்
தெரிவித்துள்ளன. அதனால், இந்தப் பிரச்னை குறித்து, பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது. ஆசிரியர்கள் பெயர்,
பரிந்துரை பட்டியலில் இல்லாமலேயே, விருதுக்கு தேர்வாகியுள்ள தாகவும், இதற்கு சில அதிகாரிகள் உடந்தை என்றும் ஆசிரியர் சங்கங்கள் புகார்
தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment