சத்துணவு
ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட
ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம்
உயர்த்துதல், பணி நிரந்தரம்,
பதவி உயர்வு என்பன
உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள்
தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து
அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதையறிந்த ஊழியர்கள் எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தலைமைச்
செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். இவர்களை போலீஸார் தடுத்ததால்,
அவர்கள் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான
தடியடியும் நடத்தினர்.இதையடுத்து, சுமார் 3000
பேர் கைது
செய்யப்பட்டனர். இவர்கள் சமூக நலக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டு,
பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment